புளியோதரை, புளிக்காய்ச்சல்



தேவையானவை:

1. புளி- இரண்டு எலுமிச்சை அளவு
2. மஞ்சள் தூள்- சிறிதளவு
3. உப்பு- தேவையான அளவு


வறுத்து அரைக்க:

1. கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
2. வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
3. மிளகு- 1/2 தேக்கரண்டி
4. வெந்தயம்- 1 தேக்கரண்டி
5. தனியா- 3/4 தேக்கரண்டி
6. மிளகாய்வற்றல்- 5
7. எள்- 1 தேக்கரண்டி
8. பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி

தாளிக்க:

1. நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
2. கடுகு- 1 தேக்கரண்டி
3. கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
4. வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
5. மிளகாய்வற்றல்- 2
6. கறிவேப்பிலை- 1 இணுக்கு
7. உடைத்தத் தோல் நீக்கிய நிலக்கடலை- 1 கைப்பிடி

செய்முறை:

1. புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
2. தாளிக்கும் பொருட்களை ஓர் வாணலியில் தாளித்துக் கொண்டு 2 டம்ளர் அளவிலான கரைத்தப் புளித்தண்ணீரை விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
3. வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து மையாக இல்லாமல் நற நற பதத்திற்குத் திரித்து[b]க் கொதிக்கும் புளித்தண்ணீரில் விட்டுத் தீயைக் குறைத்து வைக்கவும். தனியொரு வாணலியில் எண்ணெயிட்டு தோல் நீக்கிய நிலக்கடலையை வறுத்துக் கொதிப்பதுடன் சேர்க்கவும்.[/b]
4. கெட்டியாகும் போது நல்லெண்ணையைக் கொட்டிக் கிளறி ஆற விடவும்.
5. சுவையான புளிக்காய்ச்சல் தயார்.
6.விருப்பமானவர்கள் சிறிது வெல்லத்தையும் சேர்க்கலாம்.




தேவையானவை:

உதிர் உதிராக வேக வைத்தப் பச்சரிசி சாதம்- 2 கப்
புளிக்காய்ச்சல்- ஒரு கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு


செய்முறை

1. வாயகன்ற பாத்திரத்தில் உதிராக வேக வைத்த சாதத்தை ஆற விடவும்.
2. ஓரளவுக்கு ஆறினவுடன் ஆறின புளிக்காய்ச்சலைப் போட்டுப் பூத்தாப்பில் கிளறவும், அழுத்திக் கிளறினால் குழைந்து விடும்.
3. சிறிது நல்லெண்ணெய் கலந்து கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு அப்பளம், வடகத்துடன் பரிமாறவும்.
4. தயிர்சாதமும் கிளறிக் கொண்டால் புளியோதரை சாப்பிட்ட பின் அதையும் உண்ணலாம்.


பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Like me

Related

சாதம் 4447385137594593422

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

item