சுவையான கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி?
https://tamilcatering.blogspot.com/2014/04/Coriander-rice.html
கொத்தமல்லி சாதம்
அரைக்க தேவையான பொருட்கள்
கொத்தமல்லி தழை - 1கட்டு
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் -2
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1ஸ்பூன்
கறிவேப்பிலை - 5 இதழ்கள்
வரமிளகாய் - ஒன்று
அரைத்த விழுதுடன் சேர்க்க
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி -1/2 ஸ்பூன்
பெருங்காயம் - 1ஸ்பூன்
வடித்த சாதம் - 11/2 கப்
செய்முறை
கொத்தமல்லி , வெங்காயம் , மிளகாய் இவை அனைத்தையும் மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும் .கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை , வரமிளகாய் தாளித்து கொள்ளவும் ,பிறகு அரைத்த விழுதை போட்டு உப்பு, பெருங்காயம் ,மஞ்சள் பொடி சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி முந்திரி தாளித்து வடித்த சாதத்துடன் கலக்கவும் .