பாதுஷா செய்வது எப்படி?
https://tamilcatering.blogspot.com/2014/04/bathusha.html
பாதுஷா |
தேவையானவை
மைதா - கால் கிலோ
சமையல் சோடா - அரைத் தேக்கரண்டி
வனஸ்பதி - 100 கிராம்
சீனி - கால் கிலோ
செய்முறை
மைதா மாவுடன், சமையல் சோடா, வனஸ்பதி சேர்த்து கலந்து கொள்ளவும்.
இத்துடன் சிறிது சிறிதாய் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
சீனியை அரை கப் தண்ணீருடன் சேர்த்து கம்பி பாகாக காய்ச்சிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடேறியதும் மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பிறகு அதனை வடைப் போல் தட்டி எண்ணெய்யில் போட்டு வேகவிடவும்.
வாணலியின் அளவு, எடுத்துக் கொண்டுள்ள எண்ணெய்யின் அளவைப் பொறுத்து ஒரே நேரத்தில் எத்தனை போட இயலுமோ அத்தனைப் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
மிதமான தீயில் இலேசாக சிவந்து வரும் வரை வேக விடவும். பிறகு அவற்றை எடுத்து ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.
அதன்மீது சர்க்கரைப் பாகினைப் பரவலாக ஊற்றி ஆற விடவும்.