ருசியான நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி?

https://tamilcatering.blogspot.com/2014/03/Gooseberry-Chutney.html
நெல்லிக்காய் துவையல்
தேவையானவை:
முழு நெல்லிக்காய் - 5,
காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல்,
எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
நெல்லிக்காயை கடாயில் லேசாக வேக வைத்து கொட்டையை நீக்கி வைத்துக் கொள்ளவும்.
காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய் துருவலில் எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கடைசியாக நெல்லிக்காய், உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால் துவையல் ரெடி!.