அசோகா அல்வா
அசோகா அல்வா தேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், கோதுமை மாவு - 200 கிராம், நெய் - 100 மில்லி,
https://tamilcatering.blogspot.com/2014/04/asoka-alwa.html
அசோகா அல்வா
தேவையானவை:
பாசிப்பருப்பு - 200 கிராம்,
கோதுமை மாவு - 200 கிராம்,
நெய் - 100 மில்லி,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
சர்க்கரை - 400 கிராம்,
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை,
வறுத்த முந்திரி - 10.
செய்முறை:
பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, அரை மணி நேரம் ஊற வைத்து வேகவிட்டு, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
கோதுமை மாவை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, சர்க்கரை நனையும் அளவுக்கு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
கம்பிப் பாகு பதம் வந்ததும் அரைத்த பாசிப்பருப்பு, வறுத்த கோதுமை மாவு இரண்டையும் கலந்து, சர்க்கரைப் பாகில் சேர்த்துக் கிளறவும்.
கிளறும்போது நெய், கேசரி பவுடர் சேர்க்கவும்.
அல்வா பதம் போல கெட்டி யானதும், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
super.
ReplyDelete