கற்கண்டு சாதம்
https://tamilcatering.blogspot.com/2014/03/Candy-Rice.html
செய்முறை விளக்கம்:
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1 கப்
கல்கண்டு தூள் – 1 கப் (150 கிராம்)
முந்திரிப் பருப்பு – 10
உலர்ந்த திராட்சை – 10
ஏலக்காய்த்தூள் – சிறிது
குங்குமப்பூ – 1 கப்
பால் – 1 கப்
தண்ணீர் – 2 கப்
நெய் – ½ கப் (தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்)
செய்முறை:
அரிசியை நன்றாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு பால், தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக வேக வைக்கவும்.
நன்றாக வெந்தவுடன் அதில் கல்கண்டு தூள் சேர்த்துக் கிளறவும்.
குங்குமப்பூவை இத்துடன் கரைத்துவிடவும்.நெய்யில் முந்திரிப் பருப்பு திராட்சையை வறுத்துச் சேர்க்கவும்.
ஏலக்காய்த் தூளையும் தூவவும்.
நன்றாகக் கிளறி, எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்தவுடன் இறக்கி வைத்து மீதி நெய்யை ஊற்றவும்.
சூடாகப் பரிமாறவும்.
சூப்பர்
ReplyDelete