சாமை அரிசி உப்புமா

சாமை அரிசி உப்புமா
சாமை அரிசி உப்புமா
தேவையானவை:

சாமை அரிசி - ஒரு கப்,
வெள்ளை வெங்காயம்,
கேரட் - தலா ஒன்று,
நறுக்கிய பீன்ஸ்,
பச்சைப் பட்டாணி - தலா அரை கப்,
பச்சை மிளகாய் - ஒன்று,
கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி - சிறிதளவு,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.




செய்முறை: 

சாமை அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயத்தை சேர்க்கவும்.

வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மூன்று கப் தண்ணீர் விடவும்.

கொதித்ததும் சாமை அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறி, மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 10, 15 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Like me

Related

உப்புமா 8783599657301477080

Post a Comment

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete

emo-but-icon

Hot in week

Recent

Comments

item