வெண்ணை தோசை



வெண்ணை தோசை

தேவையானப்பொருட்கள்:

புழுங்கலரிசி - 2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
அரிசி பொரி - 100 கிராம்
 மைதா - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணை - 100 கிராம் அல்லது தேவைக்கேற்றவாறு
சமையல் சோடா - 2 சிட்டிகை
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


 செய்முறை:

அரிசியையும், உளுத்தம் பருப்பையும் தனித்தனியாக 8 மணி நேரம் ஊற வைக்கவும்.  வெந்தயத்தை, உளுத்தம் பருப்புடன் சேர்த்து ஊற விடவும்.     ஊறிய அரிசியை நன்றாகக் கழுவி விட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.  அதிலேயே உளுத்தம் பருப்பு, வெந்தயம், பொரி, மைதா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்தெடுத்து, உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க விடவும்.

 மறு நாள் காலையில் மாவுடன் சமையல் சோடாவைச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, சிறிது வெண்ணை தடவி, கல் சூடானதும் மாவை கல்லில் ஊற்றி மெல்லிய தோசையாகப் பரப்பி விடவும்.  சிறிது வெண்ணையை எடுத்து தோசையின் மேல் ஆங்காங்கே போடவும்.  ஒரு புறம் சிவந்து வெந்ததும், திருப்பிப் போட்டு மறு புறமும் சிவந்ததும் எடுத்து வைக்கவும்.

 கர்நாடகத்தில்,  இந்த தோசையுடன் மசித்த உருளைக்கிழங்கும் (நம்மூர் உருளைக்கிழங்கு மசாலா போல் இல்லாமல், மசித்த உருளைக்கிழங்கை வெறுமனே தாளித்து கொடுப்பார்கள்) , தேஙகாய் சட்னியும் பரிமாறுவார்கள்  நாம் நம் விருப்பம் போல் சட்னி, சாம்பார்  ஆகியவற்றுடனும் பரிமாறலாம்.

பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Like me

Related

தோசை 1511172371170514404

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

item