வெந்தயக்கீரை அடை
https://tamilcatering.blogspot.com/2014/04/vendhaya-adai.html
வெந்தயக்கீரை அடை
தேவையானவை:
வெந்தயக்கீரை - 2 கட்டு.
கடலை பருப்பு - 1 கப்.
பச்சரிசி - ஒரு கைப்பிடி.
காய்ந்த மிளகாய் - 5.
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி.
இஞ்சி துண்டு - சிறிது.
பெருங்காயம் - 1 சிட்டிகை.
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
கடலை பருப்பு, பச்சரிசியை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு வைத்து கொர கொரப்பாக, கெட்டியாக ஆட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெந்தயக் கீரையைக் காம்புகள் நீக்கிக் கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கீரையை அரைத்து வைத்திருக்கும் மாவில் கலக்கவும்.
மாவில் பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளைச் சேருங்கள். பெருங்காயத்தையும் மாவில் சேர்த்துவிடுங்கள்.
தோசைக்கல்லில் இந்த வெந்தயக்கீரை மாவை அடையாக தட்டிப் போட்டு சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள்.