கோஸ் குருமா
கோஸ் குருமா! தேவையானவை: முட்டைகோஸ் – கால் கிலோ, பெ. வெங்காயம்-1, தக்காளி-2, தேங்காய்த் துருவல் – 1 கப், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூ...
https://tamilcatering.blogspot.com/2014/04/Goes-kura.html
கோஸ் குருமா!
தேவையானவை: முட்டைகோஸ் – கால் கிலோ,
பெ. வெங்காயம்-1,
தக்காளி-2,
தேங்காய்த் துருவல் – 1 கப்,
பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க:
பட்டை,
ஏலக்காய்,
லவங்கம் – தலா 1,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.
அரைக்க:
பச்சை மிளகாய் – 4,
சோம்பு – 1 டீஸ்பூன்,
தனியா தூள் – 1 டீஸ்பூன்,
பூண்டு – 1 பல்.
செய்முறை:
முட்டைகோஸ் இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்குங்கள்.
வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்குங்கள்.
தேங்காய்த் துருவலையும் பொட்டுக் கடலையையும் அரைத்துத் தனியே வையுங்கள்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து விழுதாக்குங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், கோஸ், சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள்.
பின்னர் தக்காளி சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்