தக்காளி ஊறுகாய்



 தக்காளி ஊறுகாய்

தேவையான பொருட்கள்

பழுத்த தக்காளி நாட்டு தக்காளி - 500 கிராம்

நல்லெண்ணை - 200 கிராம்

புளி - 75 கிராம்

வெந்தயம் - 10 கிராம்

கடுகு - 10 கிராம்

மிளகாய்த் தூள் - 30 கிராம்

பூண்டு - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

தக்காளியை நன்றாகக் கழுவி, துடைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை பற்ற வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளியை போட்டு 5 நிமிடம் மூடிவைக்க வேண்டும். இடையில் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும், 10 நிமிடம் ஆனபிறகு தக்காளியை கரண்டியால் அமுக்கி கிளறிவிட வேண்டும்.

பூண்டு உரித்து அம்மியில் தட்டி வைத்து கொள்ள வேண்டும். பிறகு புளியை காம்பு இல்லாமல் சிறிது சிறிதாக உதிர்த்து விட வேண்டும். 5 நிமிடத்திற்குப் பிறகு தட்டி வைத்த பூண்டை தக்காளியில் போட்டு அடிபிடிக்காமல் கிளற வேண்டும். பிறகு மிளகாய் தூள் உப்பு போட்டு கிளற வேண்டும். தக்காளி, புளி, பூண்டு வெந்து இறக்கும் நேரத்தில் கடுகு, வெந்தயம், வறுத்து அதில் கொட்டி கிளறி இறக்க வேண்டும்.

எண்ணெயை தனியாக எடுத்து விட்டு மத்தால் நன்றாக கடைய வேண்டும். தக்காளி நன்றாக மசிந்தபிறகு அதே எண்ணெய்யை வைத்து கடுகு போட்டு தாளித்து வைக்க வேண்டும்
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Like me

Related

தக்காளி 2377329622374494297

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

item