கொள்ளு இட்லி
https://tamilcatering.blogspot.com/2014/04/kollu-itli.html
கொள்ளு இட்லி
தேவையானவை
-
புழுங்கல் அரிசி – 2 கப்
கொள்ளு – 1 கப்
வெந்தயம் – அரை தேக்கரண்டி
உளுந்து பருப்பு – 3 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
-
செய்முறை
-
அரிசி, கொள்ளு, வெந்தயம் போன்றவைகளை
தனித்தனியாக ஊற வைக்கவும்.
அரிசி, கொள்ளு இரண்டையும் நன்றாக அலசி,
கலந்து துறுதுறுப்பாக அரைத்தெடுங்கள்.
உளுந்து, வெந்தயம் இரண்டையும் கலந்து அரையுங்கள்
எல்லாவற்றையும் கலந்து, உப்பும் சேர்த்து வையுங்கள்.
மறுநாள் இட்லி சுட்டு சுவைக்கலாம்
-
( உடல் குண்டாக இருப்பவர்கள்,எடையை குறைக்க
கொள்ளு துணை புரியும்.
மாத விலக்கு கால தொந்தரவுகளை குறைக்கும்
சக்தியும் கொள்ளுக்கு இருக்கிறது. அதனால் பெண்களுக்கு
இது ஏற்ற உணவு.
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரும்)
-