பருப்பு உருண்டை காரக்குழம்பு
https://tamilcatering.blogspot.com/2014/04/paruppu-uruntai-kulambu.html
பருப்பு உருண்டை காரக்குழம்பு
தேவையானவை:
துவரம்பருப்பு - ஒரு கப்,
காய்ந்த மிளகாய் - 4,
புளி - ஒரு எலுமிச்சை அளவு,
தக்காளி-2 ,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,
மஞ்சள் ,உப்பு - தேவையான அளவு,
கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
சோம்பு(1 ஸ்பூன் ) ,
இஞ்சி (ஒரு இன்ச் துண்டு ),
பச்சை மிளகாய் (3 ) ,
தேங்காய் (ஒரு டேபிள் ஸ்பூன்) ,
உடைத்த கடலை(கால் கப்) அரைத்த மசாலா விழுது ,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
துவரம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து வடை மாவு பதத்துக்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த பருப்புக் கலவையை போட்டுக் கிளறவும்.
இத்துடன் உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும். இதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும். அடுப்பில் கடாயை வைத்து, புளியை தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் நறுக்கிய தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, பிறகு அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
பிறகு வெந்த உருண்டைகளைப் போடவும். கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து இறக்கவும். கறிவேப்பிலை , கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
சூடான பச்சரிசி சாதத்தில் உருண்டைகளைப் போட்டுப் பிசைந்து, குழம்பு தொட்டு சாப்பிடலாம். . இதற்கு சுட்ட அப்பளம் நன்றாக சேரும் . தோசைக்கும் மிக நன்றாக இருக்கும்.