மணத்தக்காளி குழம்பு
https://tamilcatering.blogspot.com/2014/04/manathakkali-kulambu.html
மணத்தக்காளி குழம்பு |
தேவையானவை
*மணத்தக்காளிக்காய்,
*நறுக்கிய சின்ன வெங்காயம்,
*தேங்காய்ப்பால்- ஒரு கப்,
*பூண்டு- 4 பல்,
*தக்காளி- 1,
*புளி- எலுமிச்சை அளவு,
*கறிவேப்பிலை- சிறிதளவு,
*மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்,
*குழம்பு பொடி- 2 டீஸ்பூன்,
*கடுகு,
*உளுத்தம் பருப்பு-அரை டீஸ்பூன்,
*மிளகாய்த்தூள்,
*எண்ணெய்,
*உப்பு- தேவையான அளவு,
செய்முறை
*மணத்தக்காளியைக் கழுவி காம்பு நீக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், குழம்பு பொடி, உப்பு போட்டுக் கிளறவும்.
*மணத் தக் காளிக்காயைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி, புளியைக் கரைத்து விட்டு, காய் வேகும் வரை கொதிக்க விடவும்.
*இதில் தேங்காய்ப் பால் சேர்த்து, மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருந்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.