தாளிச்ச இட்லி
https://tamilcatering.blogspot.com/2014/04/taalicha-itly.html
தாளிச்ச இட்லி
இட்லி மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய காய்கறிகள் - கால் கப், எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா சிறிதளவு, தேங்காய் துருவல் (விருப்பப்பட்டால்) - ஒரு டேபிள்ஸ்பூன்.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை.
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை.
செய்முறை:
இட்லி மாவுடன் காய்கறிகளையும் உப்பையும் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள்.
சற்றுப் பெரிய இட்லிகளாக ஊற்றி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இட்லித் துண்டுகளை சேர்த்துக் கிளறுங்கள்.
பிறகு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை, எலுமிச்சம்பழச் சாறு, தேங்காய் துருவல் (விருப்பப்பட்டால்) சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.