நெல்லிக்காய் அல்வா
https://tamilcatering.blogspot.com/2014/04/Gooseberry-halwa.html
நெல்லிக்காய் அல்வா
தேவையானவை:பெரிய நெல்லிக்காய் - 6,
சர்க்கரை - 200 கிராம்,
நெய் - 100 மில்லி,
ஏலக்காய்த்தூள்,
முந்திரிப் பருப்பு - சிறிதளவு,
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
செய்முறை:
பெரிய நெல்லிக்காயை கொதிக்கும் நீரில் போட்டு அரை மணி நேரத்துக்குப் பிறகு உதிர்த்து, விதை நீக்கி, மிக்ஸியில் அரைக்கவும்.
வாணலியில் சிறிது நெய் விட்டு நெல்லிக்காய் விழுதை வதக்கி, பின்பு சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து, மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்