மேங்களூரியன் நெய் சாதம்



மேங்களூரியன் நெய் சாதம்

தேவையானவை

பாசுமதி அரிசி - 2 கப்,
தண்ணீர் - 4 கப்,
நெய் - அரை கப்,
பட்டை, கிராம்பு - தலா 2,
பிரியாணி இலை - 2,
முந்திரி - 50 கிராம்,
திராட்சை - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 2,
நறுக்கிய வெங்காயம் - 2,
உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை 

அரிசியைக் களைந்து, போதுமான தண்ணீர் விட்டு, அரை மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். 4 டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். மீதி நெய்யை சூடாக்கவும். பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்க்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வதக்கவும். ஊற வைத்த அரிசி, உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, மூடி, வேக விடவும். வெந்ததும், முந்திரி, திராட்சையால்  அலங்கரித்துப் பரிமாறவும்.
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Like me

Related

சாதம் 1145164832268884085

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

item