மைதா-மோர் தோசை
https://tamilcatering.blogspot.com/2014/04/buttermilk-batter.html
குழந்தைகள் எப்போது தோசை, இட்லி வேண்டும் என்று கேட்பார்கள் என்பதே தெரியாது. அவ்வாறு அவர்கள் திடீரென்று கேட்கும் போது, வீட்டில் மைதா மாவு மற்றும் அரிசி மாவை வைத்து, சூப்பராக தோசை விட்டு தரலாம். இப்போது அந்த தோசையை எப்படி செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
மோர் - 1/4 கப்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, மோர், சீரகம், கொத்தமல்லி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் அதில் இந்த தோசை மாவை, மெல்லிய தோசைகளாக விட்டு, முன்னும் பின்னும் வேக வைத்து, மொறுமொறுவென்று சுட்டு எடுக்கவும்.
இப்போது ஈஸியான மைதா-மோர் தோசை ரெடி!!! இதனை தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.