தக்காளி குழம்பு



தக்காளி குழம்பு

தேவையானவை: 

நாட்டுத் தக்காளி, 
பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும் அல்லது பொடியாக நறுக்கவும்), 
கீறிய பச்சை மிளகாய் - 1, 
பூண்டு - 2 பல், 

பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிதளவு, 
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், 
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், 
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், 
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), 
கறிவேப்பிலை, 
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு... பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். 

தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். 

பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரைத்த தக்காளி விழுது (அ) பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Like me

Related

தக்காளி 891733130095220211

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

item