கார்ன் மசாலா சாதம்


கார்ன் மசாலா சாதம்

டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த ஒரு கலவை சாதம் என்று சொன்னால், அது கார்ன் மசாலா சாதம் தான். இந்த சாதத்தில் கொழுப்புகள் குறைவாக இருக்கும். இப்போது அந்த சாதத்தின் செய்முறையைப் பார்ப்போமா!!!


தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 1 கப்
சோள மணிகள் - 1 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
முந்திரி - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அரிசியை நன்கு கழுவி போட்டு, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

அதே சமயம், சோள மணிகளை சூடான நீரில் 4-6 நிமிடம் ஊற வைத்து, நீரை வடித்துக் கொள்ள வேண்டும். அதேப் போன்று பச்சை பட்டாணியையும் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கர் விசில் வந்ததும், அதில் உள்ள கேஸ் போன பின், சாதத்தை எடுத்து, குளிர வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி, சீரகம், கிராம்பு, பட்டை போட்டு தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் பச்சை பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து, கிளற வேண்டும்.

அடுத்து குளிர வைத்துள்ள சாத்தை போட்டு, முந்திரி மற்றும் ஊற வைத்துள்ள சோள மணிகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.

இப்போது சுவையான கார்ன் மசாலா சாதம் ரெடி!!!

இதன் மேல் கொத்தமல்லியை தூவி, ஏதேனும் குழம்பு அல்லது தக்காளி கெட்சப் உடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

குறிப்பு: காரம் அதிகம் வேண்டுமென்பவர்கள், இதோடு கரம் மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Like me

Related

சாதம் 5953526168178465763

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

item