பச்சைமல்லி சாதம்



பச்சைமல்லி சாதம்

தேவையானவை:

 பச்சரிசி  ஒரு கப்,
நெய்  ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு  தேவையான அளவு.



வறுத்து அரைக்க: 

மல்லித்தழை  ஒரு சிறிய கட்டு,
உளுத்தம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயம்  ஒரு சிறிய துண்டு,
புளி  சிறிய நெல்லிக்காய் அளவு,
எண்ணெய்  2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்  6.
தாளிக்க: கடுகு  அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு  ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் & 2 டீஸ்பூன்.

செய்முறை: 

அரிசியை சிறிது உப்பு சேர்த்து, உதிராக வடித்துக்கொள்ளுங்கள்.
மல்லித்தழையை சுத்தம் செய்து, நன்கு அலசிக்கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, பெருங்காயம், உளுந்து, மிளகாய் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு, மல்லித்தழை, புளி சேர்த்து நன்கு வதக்கி இறக்குங்கள்.
இதை ஆறவிட்டு, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள்.
வடித்த சாதத்தில், இந்த விழுதைச் சேர்த்து, நன்கு கலந்து வையுங்கள். அத்துடன் கடுகு, உளுத்தம்பருப்பு, தாளித்து சேர்த்து, நெய்யை அதனுடன் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள். பசியைத் தூண்டும் இந்தப் பச்சைக் கொத்துமல்லி சாதம்
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Like me

Related

சாதம் 2439484940339219991

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

item