மிளகு ரசம்


மிளகு ரசம்

தேவையான பொருள்கள்:

புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
மிளகுப் பொடி - 2 1/2 தேக்கரண்டி
துவரம்பருப்பு - 6 மேசைக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
தக்காளி - சிறியது ஒன்று
கடுகு - ஒரு தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து


செய்முறை:

புளியை சற்று வெதுவெதுப்பான நீரில் ஊறப் போடவும். மிளகை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். துவரம்பருப்பை சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும்

1 1/2 கப் நீரில் புளியைக் கரைத்து ஒரு காப்பர் பாட்டம் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.

அதில் பெருங்காயம், தேவையான உப்பு, மிளகுப் பொடி, சிறு துண்டங்களாக நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு புளி வாசனை போய் கொதித்து ஒரு கப்பாக குறைந்ததும், வெந்த துவரம் பருப்பை நீரில் கரைத்து 1 1/2 கப் அளவுக்கு சேர்க்கவும்.

மேலே நுரைத்து வந்ததும், இறக்கி வைத்து, நெய்யை காய வைத்து அதில் கடுகு போட்டு வெடித்ததும், அதனுடனேயே கறிவேப்பிலையும் சேர்த்து ரசத்தில் கொட்டவும்.

சளி, ஜுரம் வந்த நேரங்களில் சூடாக இந்த ரசத்தை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

ரசத்தை கொதிக்க விடக் கூடாது. நுரைத்து வந்தவுடனேயே இறக்கி விடவும். மிளகுடன் அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொடி செய்து போட்டால் வாசனையாக இருக்கும். ரசத்திற்கு நெய்யில் கடுகு தாளித்தால் தான் நல்ல வாசனையாக இருக்கும். ரசம் செய்ய எவர்சில்வர் பாத்திரத்தை விட காப்பர் பாட்டம் பாத்திரமே சிறந்தது.

பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Like me

Related

ரசம் 4054609621316648991

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

item